கல்விசார் பத்திரிகை வெளியீடு...

(றிஸ்வான் சாலிஹு)

கொவிட் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளைச் சீரமைக்கும் நோக்கில் ஊவா மாகாண கல்வி அமைச்சு, ஊவா மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் மாகாண ஊடகப் பிரிவு இணைந்து கல்விசார் பத்திரிகை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

"ஊவாதீப கல்விசார் பத்திரிகை' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த பத்திரிகையில் உயர் தரம், சாதாரண தரம் மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களின் அணைந்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்கள் உள்ளடக்கியதாகத் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகைகள் ஊவா மாகாண வலயக்கல்வி காரியாலயங்களினால், பாடசாலை அதிபர்களின் ஊடாக அணைந்து மாணவர்களினதும் வீடுகளுக்கே விநியோகிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கெளரவ ஏ.ஜே.எம்.முஸம்மில், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, கல்விப் பணிப்பாளர் டீ.எம். ரத்நாயக உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





கல்விசார் பத்திரிகை வெளியீடு... கல்விசார் பத்திரிகை வெளியீடு... Reviewed by Editor on June 17, 2021 Rating: 5