பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்!!!

பதுளை, வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை(28) நடைபெற்றது.

இதற்கமைய வெலிமடை  முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கு 110x25 அளவிலான இரண்டுமாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ தேனுக விதானகமகே, ஊவா மாகாண ஆளுநர் கெளரவ ஏ.ஜே.எம்.முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாமர சம்பத் தசநாயக, ஊவா மாகாண சபையின் தலைவர் ஏ.எம். பூத்ததாஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாமிக பூத்ததாஸ, வெலிமடை பிரதேச சபை தலைவர் எஸ்.ஏ.ஆர். பந்துசேன, வெலிமடை பொதுஜன பெரமுன அமைப்பாளர் சம்பத் ஜயசுந்தர, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.







பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்!!! பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்!!! Reviewed by Editor on June 29, 2021 Rating: 5