புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் புத்தளத்திற்கான இடை கால வெள்ள தடுப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தில்லயடி- ரத்மல்யாய- YMMA நகர் பிரதேசம் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கபப்படுவதும் மக்கள் இன்னல்கள் அனுபவிப்பதும் வழமையாக இருக்கிறது. இதை நிவர்த்தி செய்ய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் 5.5m நீளமும் 4m அகலம் கொண்ட பாலம் ஒன்றையும் Colour corn factory 3,4ம் குறுக்குத்தெருவில் இருக்கும் வடிகானை நீக்கிவிட்டு அதில் பெரியதொரு சப்பாத்துப்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை வகுத்து அதற்கான அளவீடுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு அதற்குரிய மதிப்பீடும் செய்யப்பட்டது.
மதிப்பீடு விடயங்களை பார்வையிடுவதற்காகவும் மேலதிக நடவடிக்கை முன்னெடுப்பதற்காகவும் குருநாகலில் இருந்து பிரதான பொறியியலாளர் சமரதுங்க, Design Engineer பாலசூரிய, சிலாபம் பொறியியலாளர் முராதி ஆகியோர் சமூகமளித்து அதை மேற்பார்வை செய்தனர். விரைவில் வேலைகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றன.
புத்தளத்திற்கான இடை கால வெள்ள தடுப்புத்திட்டம்...
Reviewed by Admin Ceylon East
on
June 13, 2021
Rating:
