சுகாதார மேம்பாட்டு கிராம மட்டக்குழு அங்குர்ப்பனம் நிந்தவூர் சுகாதாரவைத்திய அதிகாரியின் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயளாளர், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர், அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தின் செயளாளர், பள்ளிவாயல் உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகான ஆளுநரின் கொறோனா தடுப்பு செயலனியின் அம்பாரை மாவட்ட இனைப்பாளர் ஆகியோரின் பங்குபற்றுதலோடு திங்கட்கிழமை (05) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இந்த குழுக்களின் குழுத் தலைவர்களுக்கான (DO GT DS Office) அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டதோடு,பிரயாணகட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் இயல்பு வாழ்க்கையோடு கொறோணா தொற்றிலிருந்து எமது சமூகத்தை பாதுகாப்பதற்கான தொடர் விழிப்பூட்டல் செயற்பாட்டின் முக்கியதுவம் பற்றி குழுத்தலைவர்களுக்கு நிந்தவூர் கோவிட் செயலணியினரினால் விளக்கமளிக்கப்பட்டது.
மக்கள் தொடரந்தும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம், குறிப்பாக திருமண வைபவம்கள் மரணச்சடங்குகளில் மக்கள் ஒன்று கூடுவது முற்றாக தவிர்கப்படல் வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மேலும் விழிப்பூட்டப்படல் வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் சுகாதார மேம்பாட்டிற்கான மேற்படி கிராமமட்டக்குழுவானது தனித்தனி கிராமசேவகர் பிரிவுகளில் பொதுமக்களின் ஒட்டுமொத்த நலன்பேனும் நிலைபேறான அமைப்பாக அவ்வப்பிரிவில் சுகாதார (கொறோனா, டெங்கு, போதைப்பொருள் பாவனை…….) மட்டுமல்லாது அனைத்து சமூக நலன்புரி விடயம்களிலும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாகத்தினருடன் இனைந்து சேவையாற்றும் குறிக்கோளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது நிந்தவூர் கோவிட் செயலனியின் வழிகாட்டலின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தெரிவித்துள்ளார்.
