ஒரே நாளில் கொரோனா தொற்றால் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணம்..!

இந்தோனேசியாவில் முதல்தடவையாக கொரோனாவைரசினால் ஒரே நாளில் இன்று (07)  புதன்கிழமை 1,000 பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இந்தொனேசியாவின் ஜாவாவில் மருத்துவமனைகள்  சிகிச்சை வழங்க கூடிய எல்லையை கடந்துவிட்டன ,ஆறுநகரங்களில் ஒக்சிசனிற்கு பெரும் தட்டுப்பாடு  காணப்படுகின்றது.

இதேவேளை இந்தோனேசியாவின் பல பகுதிகளில் புதிதாக வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

சிவப்பு வலயங்கள் என குறிக்கப்படும் பகுதிகளில் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வரும் அதிகாரிகள் பொதுமக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுபாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஜாவா பாலி தீவுகளில் பெருமளவிற்கு அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பப்புவா சுமத்திராவில் பாரிய நோய் பரவல் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து  கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பிராந்தியங்களின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை 34,379 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 1,040 மரணங்கள் பதிவாகியுள்ளன.



ஒரே நாளில் கொரோனா தொற்றால் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணம்..! ஒரே நாளில் கொரோனா தொற்றால் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணம்..! Reviewed by Editor on July 07, 2021 Rating: 5