அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் ஒருவரின் நிருவாக முறைகேடுகள், அடக்குமுறைகள், கொவிட் தொடர்பான நோயாளிகளின் தவறான நிருவாக நடைமுறைகள் மூலம் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய அவரது செயற்பாடுகளை கண்டித்து இன்று (08) வியாழக்கிழமை காலை 8.00மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவரின் செயற்பாடுகளை கண்டித்தும், அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை மற்றும் இவரை உடனடியாக இடமாற்றம் செய்யும்படியும் வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார வைத்திய பணிப்பாளர் நாயகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்கள். இருந்தாலும் இதற்கு சாதகமான பதில் இதுவரை கிடைக்காத நிலையில் இன்று இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் பிரிவுகள் இயங்காமல் உள்ள போதும், கொரோனா சிகிச்சை, அவசர சிகிச்சை, மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் தொடர்ச்சியாக இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
