(றிஸ்வான் சாலிஹு)
நாளை (29) வியாழக்கிழமை முதல் மீண்டும் கொரோனா தடுப்பு மருந்தேற்றும் பணி காலை 8.00 மணி முதல் மாலை 3.30மணி வரை அக்கரைப்பற்றில் ஆரம்பமாகும் என அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரி, அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம், முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), காதிரியா வித்தியாலயம் மற்றும் பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிஷா மகா வித்தியாலயம் ஆகிய ஐந்து இடங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணி நடைபெறும் என வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நிலையத்திலும் தினமும் 1000 பேர் என்பதே நமது இலக்கு, எனவே கிடைத்துள்ள சந்தர்பத்தினை தவற விட வேண்டாம் எனவும், உங்கள் நேரங்களினை சிக்கனமாக்கும் விதத்திலேயே எமது பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளமையினால் உரிய நேரத்திற்கு வருகை தருமாறும் டாக்டர் காதர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்ற வரும்போது கட்டாயம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை அல்லது அரச தொழில் அடையாள அட்டை அல்லது வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தினை மறக்காமல் கொண்டு வரவும்.
உங்கள் ஒத்துழைப்பே நமது வெற்றி என்ற அடிப்படையில் முடியுமான வரை இந்த தகவலை மற்றவர்களுக்கும் அறிவித்து கொரோனா தொற்றிலிருந்து எமது பிரதேசத்தை பாதுகாக்க அனைவரும் எம்மோடு கைகோர்க்குமாறு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி இப் பிரதேச மக்களை கேட்டுள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் இடங்களும், காலமும்..
