தொலைக்கல்வி கற்பித்தலுக்கான உபகரணங்கள் பழைய மாணவர் சங்கத்தினால் கையளிப்பு!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஐ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தொலைக் கல்வி (online) மூலம் கற்பிப்பதற்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (06) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலையில்ஏற்பாடு செய்யப்பட்டது. 

பாடசாலை அதிபர் எஸ்.றிபாயுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம், பிரதி அதிபர் எம்.எம்.றிபாஸ், பழைய மாணவர் சங்க செயலாளர் ஆசிரியர் ஏ.ரீ.நக்கீல், உறுப்பினர்களான ஏ.ஜீ.நிசாம், என்.ரீ. ஹமீட் அலி ஆகியோரும் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 

பாடசாலையின் பழைய மாணவரான ஆப்தீன் ஸகீ அவர்களின் நிதியுதவியில் பெறப்பட்ட தொலைக்கற்றல் உபகரணங்களை அவரின் சகோதரரும் இப்பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம்.சாதீர் அவர்களினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த உபகரணங்களை வழங்கிய நன்கொடையாளிக்கும், இதை ஏற்பாடு செய்து தந்த பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அதிபர்  நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.







தொலைக்கல்வி கற்பித்தலுக்கான உபகரணங்கள் பழைய மாணவர் சங்கத்தினால் கையளிப்பு!! தொலைக்கல்வி கற்பித்தலுக்கான உபகரணங்கள் பழைய மாணவர் சங்கத்தினால் கையளிப்பு!! Reviewed by Editor on July 06, 2021 Rating: 5