(பொத்துவில் செய்தியாளர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களினால், 75 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள், இன்று (15) ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அமையப் பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
தீவிரமாக பரவி வரும் கோவிட்-19 காரணமாக, தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையை கருத்திற் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், சுகாதார அமைச்சிடம் விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து, தருவிக்கப்பட்ட இம்மருத்துவ உபகரணங்கள், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் ரஹீம், பாராளுன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் யூ.எல்.நியாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 15, 2021
Rating:



