கொரோனா கொடிய நோய் அல்ல - எஸ்.பி.திசாநாயக்க எம்.பி

கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (26) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனினும் மக்களிடையே காணப்படும் தேவையற்ற அச்சமே இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் இறப்பு விகிதம் இன்னும் 1.9 சதவீதமாக உள்ளதாகவும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார்.

இவரது கருத்தைப்போலவே தேசிய காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் முன்னர் கொரோனா பற்றி கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



கொரோனா கொடிய நோய் அல்ல - எஸ்.பி.திசாநாயக்க எம்.பி கொரோனா கொடிய நோய் அல்ல -  எஸ்.பி.திசாநாயக்க எம்.பி Reviewed by Editor on August 26, 2021 Rating: 5