கிழக்கு மண்ணில் இருந்து தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு செல்லும் அப்ஹம் சிமர்

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் முறையாக  ஒருவர்  கடேட் நிலதாரியாக    (Officer Cadets ) ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகும் வரலாற்று முக்கியத்துவமிக்க சாதனையாவதோடு, இதன் மூலம் இவர் இலங்கை விமானப்படை வைத்தியராக எதிர்காலத்தில் எம் சமூகம் சார்ந்து பணியாற்றவுள்ளார்.

முஹம்மது அப்துல் நஸீர் அப்ஹம் சிமர்    ஆகிய இவர், தனது ஆரம்ப கல்வியை சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் கல்லூரியிலும் உயர் தர  கல்வியை உயிரியல் விஞ்ஞான பிரிவில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்திலும் கற்றார். இவர் சம்மாந்துறை அப்துல் நஷீர் , சகியா தம்பதிகளின் புதல்வராவார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில்  9 A உயர் சித்தியையும், கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் A 2B  Z Score 1.6345 ( 2020 GCE Advance level Examination ) சித்தியையும் பெற்று கல்வித் துறையில் சாதனை படைத்தார். 

தனது பாடசாலைக் காலத்தில் கல்விக்கு  நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பல துறைகளில் ஈடுபடுத்திய இவர் 2014 ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற ரந்தம்பே  கடேட்  மாணவர்  பயிற்சிப் பட்டறை மற்றும் தேசிய ரீதியில் இடம் பெற்ற முதலுதவி பயிற்சி பட்டறை ஆகியவற்றிலும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிப் பரீட்சை , நேர்முக தேர்வு , உடல் உள  பரிசோதனைகள் என்பனவற்றில் உயர் சித்தியை பெற்றதன் மூலம் இவ் அரிய வாய்ப்பை பெற்று எம் சமூகத்திற்கும் சம்மாந்துறை மண்ணிற்கும் பெருமை தேடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



கிழக்கு மண்ணில் இருந்து தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு செல்லும் அப்ஹம் சிமர் கிழக்கு மண்ணில் இருந்து தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு செல்லும் அப்ஹம் சிமர் Reviewed by Editor on August 14, 2021 Rating: 5