மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)

அம்பாறை மாவட்ட நுகர்வோர்  அதிகார சபையினரால்  சம்மாந்துறை, நிந்தவூர்,பாலமுனை,அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு நேற்று (25)  அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. 

பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது மேலதிக கட்டணங்கள் அறவிடுவது பொருட்களினை  பதுக்கி  வைப்பது தொடர்பான பொது மக்களினால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின்  மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ண தலைமையிலான குழுவினரால் குறித்த திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது வியாபார நிலையங்களுக்கு  எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன்  மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக  அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின்  மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ண தெரிவித்தார்.





மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு Reviewed by Editor on August 26, 2021 Rating: 5