அத்தியாவசிய தேவைகளுக்கன்றி வெளியே செல்வதையும் தேவையற்ற ஒன்றுகூடல்களையும் தவிர்ந்து கொள்ளுமாறு சகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான விசேட அறிவித்தலொன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று(10) செவ்வாய்க்கிழமை பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய கொவிட்-19 நிலைமை காரணமாகஇ மறுஅறிவித்தல் வரை மாளிகாவத்தையிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகம் மூடப்பட்டிருக்கும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சேவைகளை வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 0117 490 490 எனும் துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
August 11, 2021
Rating:
