(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இனிவரும் காலங்களில் குப்பைகளை தரம் பிரித்து உக்காத கழிவுகள் உக்கக் கூடிய கழிவுகள் என இரு வகையாக பிரிக்கப்பட்டு அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே இரு நிற பைகளில் (பச்சை நிறப் பையில் உக்கக்கூடிய கழிவுகளும், மஞ்சள் நிறப் பையில் உக்காத கழிவுகளும்) சேகரிக்கப்பட்டு அகற்றப்படுதல் வேண்டும் என அக்கரைப்பற்று பிரதேச சபை கெளரவ தவிசாளர் எம்.ஏ.றாசீக் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதற்கான பைகள் ஒவ்வொன்றும் 50 ரூபாய் விலை நிர்ணயத்தோடு இன்று (18) முதல் பிரதேசசபையினால் இதற்காக பொறுப்பாக்கப்பட்டவர்கள் உங்களுடைய வீதிகளில் வந்து கொண்டிருப்பதனால் உரிய தொகையினைச் செலுத்தி தேவையான பைகளை பெற்றுக் கொள்வதோடு, உரியவரிடம் பற்றி பற்றுச்சீட்டினை பெற்றுக் கொள்ளும்படி தவிசாளர் அம்மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றிலிருந்து குறிப்பிடப்பட்ட பைகளில் இடப்படாத குப்பைகள் ஏற்கப்பட மாட்டாது என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு, பெரிய மரங்களை தறித்து அப்புறப்படுத்த நினைப்பவர்கள் தயவுசெய்து பிரதேச சபைக்குத் தெரியப்படுத்தி அதற்கான வாகன ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும்படியும் அவர் மக்களை கேட்டுள்ளார்.
Reviewed by Editor
on
August 18, 2021
Rating:
