நாட்டில் மீண்டும் கொரோனா தலை விரித்தாடுவதால் ஏற்கனவே திட்டமிட்டபடி பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாது என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாது என கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் இன்று (09) திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சு ஏலவே அறிவித்திருந்தது.
எனினும், பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிருந்தாலும், தற்போது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தமையினால் கொரோனா மரணங்கள் அதிகரித்து உள்ளதால் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது என கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
August 09, 2021
Rating:
