(ஜெமீல் அகமட் )
தற்போது நாட்டில்கொவிட் -19 (கொரோனா) பரவால் அதிகரித்து வருவதால் அவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான பல நிகழ்வுகள் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேசமெங்கும் இன்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்வுகளின் போது நிந்தவூர் பிரதேசத்தின் எல்லைகளில் கொவிட் -19 (கொரோனா) விழிப்புட்டலுக்கான விழிப்புனர்வு பதாதைகள் காட்சிபடுத்தல் அத்தோடு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஆலோசனைகள் என்பன மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன
நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி சுகாதார நடைமுறையின் கீழ் மக்கள் நடமாடுவதற்கான ஏற்பாடுகளை செயல்படுத்த டாக்டர் பறூசா நக்பர் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றார் அதற்கு மக்களும் பூரண ஆதரவு வழங்குவதை காணமுடிகின்றது.
இன்று டாக்டர் பறூசா நக்பர் அவர்களின் தலைமையில் கொவிட் செயலனி, சுகாதார ஊழியர்கள் ஆகியோர் ஒன்றினைந்து மேற்கொண்ட கொரோனா விழிப்புனர்வு நடவடிக்கைகளை மக்கள் பாராட்டுகின்றனர்.
மேலும் நிந்தவூர் கொவிட்-19 (கொரோனா) செயலனி மேற்கொண்ட கொரோனாவை விரட்டுவதற்கான தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது ஏனைய ஊர்களிலும் பின்பற்றக்கூடிய நடவடிக்கை என்றுதான் கூற வேண்டும்
மேலும் நிந்தவூரில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொவிட் -19 (கொரோனாவை ) கட்டுப்படுத்துவாதற்காக,பிரதேச செயலகம் ,பிரதேச சபை, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் சமுக நலன் விரும்பிகள், புத்தி ஜிவிகள் என பலரும் ஒன்றினைந்து கொவிட் -29 ஒழிப்பு செயலானி உருவாக்கி கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க டாக்டர் பறூசா நக்பர் அவர்கள் கால நேரமின்றி தனது பணியை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 13, 2021
Rating:

