நான்கு இடங்களில் இடம்பெற்ற மூன்றாவது கட்ட கொவிட் தடுப்பூசி

(றிஸ்வான் சாலிஹூ)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணனின் வழிகாட்டலில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை 30வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும்  முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில், அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவியுடன் இன்று (07) செவ்வாய்க்கிழமை காலை முதல் நான்கு இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது.

அதனடிப்படையில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, ஆயிஷா மகளிர் கல்லூரி, அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் மற்றும் அல்-பாத்திமிய்யா வித்தியாலயம் ஆகிய இடங்களில் இத்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது.

பொது மக்கள் மிகவும் இலகுவாகவும், சிரமமின்றி தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதுடன், இந்த பிரதேசத்தில் சகலரும் குறித்த தடுப்பூசியை பெற்று கொவிட் தொற்று அற்றவர்களாக சமூகத்தில் வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு பகலாக களத்தில் இருக்கும் சுகாதார பிரிவினருடன் இணைந்து அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ குழுவினரின் செயற்பாடு பாராட்டக்கூடியதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினத்தில் மாத்திரம் குறித்த தடுப்பூசி அக்கரைப்பற்று சுகாதார பிராந்தியத்தில் 2565 பேருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















நான்கு இடங்களில் இடம்பெற்ற மூன்றாவது கட்ட கொவிட் தடுப்பூசி நான்கு இடங்களில் இடம்பெற்ற மூன்றாவது கட்ட கொவிட் தடுப்பூசி Reviewed by Editor on September 07, 2021 Rating: 5