கிராமத்துடனான கலந்துரையாடல் நானாட்டான் பிரதேச செயலகத்தில்

கிராமத்துடன் கலந்துரையாடல், கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலனியினால் 2022 ஆம் ஆண்டு பாதீட்டை அடிப்படையாகக் கொண்டு (வரவுசெலவு திட்டம்) முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கும் மூன்று மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நிதி ஒதுக்கீட்டை விஷேட பொறிமுறை ஒன்றின் மூலம் மேற்கொள்வதற்கான ஆலோசனை கலந்துரையாடலொன்று நேற்று (28) செவ்வாய்க்கிழமை நானாட்டான்  பிரதேச செயலகத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நானாட்டான்  பிரதேச செயலாளர் திரு. மாணிகவாசகர் ஸ்ரீஸ்கந்தராசா , உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. கயாநந்தன் திவாகரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 








கிராமத்துடனான கலந்துரையாடல் நானாட்டான் பிரதேச செயலகத்தில் கிராமத்துடனான கலந்துரையாடல்  நானாட்டான் பிரதேச செயலகத்தில் Reviewed by Editor on September 29, 2021 Rating: 5