பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதாரப் பிரிவின் வழிகாட்டலுடன் பாடசாலைகள் நான்கு கட்டங்களாக ஆரம்பமாகும் என்று சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கட்டம் 1:

தரம் 1-5, மாணவர் மொத்த எண்ணிக்கை 200க்குக் குறைந்த பாடசாலைகளை ஆரம்பித்தல்.


கட்டம் 2:

மாணவர் எண்ணிக்கை 200க்கு அதிமான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை 100க்கு குறைவாக உள்ள பாடசாலைகளின் முழு வகுப்புகளும் ஆரம்பிக்கப்படல்.


கட்டம் 3:

அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12, 13  மற்றும் முழு மாணவர் எண்ணிக்கை  200க்கு குறைந்த பாடசாலைகளின் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படல்.

கட்டம் 4:

அனைத்து பாடசாலைகளினதும் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படல்.

ஒவ்வொரு கட்டத்தையும் நடைமுறைப்படுத்த முன்னர், நோயின் பரவல் நிலை கருத்தில் கொள்ளப்படவேண்டும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் அல்லது இந்த ஒவ்வொரு கட்டங்களும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பான அறிவித்தல் இவ்வழிகாட்டலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி - முஹம்மட் அர்ஷாத்










பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல் Reviewed by Editor on September 22, 2021 Rating: 5