பொது சத்திர சிகிச்சை நிபுணருக்கான சேவை நலன் பாராட்டு விழா

(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி விட்டு சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பொது சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் பீ‌.கே.ரவீந்திரன் அவர்களுக்கு ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்த பிரியாவிடை மற்றும் சேவை நலன் பாராட்டு விழா தாதி உத்தியோகத்தர் வை‌.எல்.ஸிறாஜ் தலைமையில் சனிக்கிழமை (11) காலை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனிபா பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், சிரேஷ்ட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரதம அதிதி மற்றும் வைத்தியர்களினால் டாக்டர் ரவீந்திரன் பொன்னாடை போர்த்தி மற்றும் ஞாபக சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.









பொது சத்திர சிகிச்சை நிபுணருக்கான சேவை நலன் பாராட்டு விழா பொது சத்திர சிகிச்சை நிபுணருக்கான சேவை நலன் பாராட்டு விழா Reviewed by Editor on September 11, 2021 Rating: 5