ரிஷாட் எம்‌.பியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 15 ஆம் திகதி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகளை, எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கோரி, குறித்த மனுவை தாக்கல்செய்திருந்தார்.

குறித்த மனு இன்று (12) செவ்வாய்க்கிழமை விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.





ரிஷாட் எம்‌.பியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 15 ஆம் திகதி ரிஷாட் எம்‌.பியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 15 ஆம் திகதி Reviewed by Editor on October 12, 2021 Rating: 5