சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் பொலிசாரால் அன்பளிப்பு

(சமூர்டீன் நெளபர்)

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் தலைமையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது

மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆரய்சியின் பங்கு பற்றுதலுடன் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊ.ஐ  ஜெதிலகவினால் கடந்த வெள்ளிக்கிழமை (01) குறித்த கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன

மன்னார் கீரி அன்பு சகோதரர் இல்லம் மற்றும் மன்னார் மெதடீஸ் சிறுவர் இல்லத்தில் உள்ள மாணவர்ளுக்கு மேற்படி கற்றல் உபகரணங்கள் அடங்கிய பரிசு பொருட்கள் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் பொலிசாரால் அன்பளிப்பு சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் பொலிசாரால் அன்பளிப்பு Reviewed by Editor on October 08, 2021 Rating: 5