படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? இதனால் உண்டாகும் தீய விளைவுகள்

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரணங்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.


1. நெருக்கம் குறைகிறது

கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

2. எளிதில் போர் அடித்து விடும் 

படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது. 

3. உடலுறவில் நாட்டமின்மை 

நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும். 

4. வேறு ஒருவர் மீது காதல் 

நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும். 

5. புரிதலின்மை

உணர்வுகளை பகிர நெருங்க நினைக்கும் கணவன்/மனைவி அவர்களை விட்டு விலகிச் செல்வதால் இருவருக்கும் இடையே மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள் இதனால் அவர்களுக்குள் இடையே புரிதல் இல்லாமல் போய்விடுகிறது

6. சண்டைகள் 

உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும். 

7. வெறுப்பு 

உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஆகவே நண்பர்களே துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்.

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? இதனால் உண்டாகும் தீய விளைவுகள் படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? இதனால் உண்டாகும் தீய விளைவுகள் Reviewed by Editor on October 29, 2021 Rating: 5