நிழல் தரும் மரங்கள் பாடசாலையின் பழைய மாணவிகளால் நடப்பட்டது

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) "நிழல் தரும் மரங்கள் நடும்" செயற்திட்டத்தின் அடிப்படையில் நான்காம் கட்ட நிழல் தரும் மரங்கள் நடுகை வைபவம் புதன்கிழமை (06)  பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இப்பாடசாலையில் 2000ஆம் ஆண்டு க.பொ.தா உயர் தரம் கல்வி கற்ற மாணவர்களிடம் நிழல் தரும் மரங்கள் நடுவதற்கான முழு அனுசரனையை வழங்குமாறு கல்லூரி நிர்வாகம் தெரிவித்த போது, அதில் உள்ள எட்டு பெண் மாணவிகள் மணமுகந்து விலையுயர்ந்த 10 மரங்களை பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி அதனை அவர்களின் கரங்களினால் நட்டியும் வைத்தார்கள்.

பாடசாலை அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையில் இடம்பெற்ற மரம் இம்நடுகை வைபவம், கல்லூரியின் பிரதி அதிபர் யூ.எல்.ஏ.ஹக்கீம் அவர்களின் தலைமையில், ஆசிரியர் ஏ.சீ.சியான், ஆசிரியை திருமதி சப்ரினா நாசர், ஆசிரியை திருமதி. சியாத் மற்றும் 2000 ஆம் கல்வி கற்றதும் மரங்களை அன்பளிப்பு செய்த பழைய மாணவிகளின் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாக சுகாதார வழிகாட்டலில் இடம்பெற்றது.

பாடசாலையில் செயற்படுத்தப்படும் இவ்வாறான நன்மையளிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தொடர்ச்சியாக பழைய மாணவர்கள் உதவி வரும் இச்சந்தர்ப்பத்தில், எதிர்காலத்திலும் இது போன்ற மர நடுகை செயற்பாட்டிற்கு பழைய மாணவர்கள் தங்களது முடியுமான உதவிகளை செய்து கொள்ளுமாறு பிரதி அதிபர் ஹக்கீம் மாணவர்களிடத்தில் வினயமாக கேட்டுக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












நிழல் தரும் மரங்கள் பாடசாலையின் பழைய மாணவிகளால் நடப்பட்டது நிழல் தரும் மரங்கள் பாடசாலையின் பழைய மாணவிகளால் நடப்பட்டது Reviewed by Editor on October 08, 2021 Rating: 5