இன்று முதல் அமுலாகும் பால் மாவுக்கான புதிய விலைகள்

பால் மாவுக்கான புதிய விலைகள் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பால் மாவின் விலையை 250 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று (10) முதல் இறக்குமதி பால் மா ஒரு கிலோ 1,195 ரூபாவுக்கும் மற்றும் 400 கிராம் பால் மா பக்கெற் 480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இன்று முதல் அமுலாகும் பால் மாவுக்கான புதிய விலைகள் இன்று முதல் அமுலாகும் பால் மாவுக்கான புதிய விலைகள் Reviewed by Editor on October 09, 2021 Rating: 5