நசீர் அஹமட் எம்.பியின் தலைமையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கெளரவ ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் இன்று (14) வியாழக்கிழமை கொவிட் 19 காரணமாக மிகவும் இறுக்கமான நிலையில் சுகாதார முறைப்படி நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் அபிவிருத்தி சம்பந்தமான மீளாய்வு செய்யப்பட்டத்தோடு 2022 ஆம் ஆண்டு தேசிய வரவு செலவு திட்டத்திற்கான முன் மொழிவுகள் சம்பந்தமாக ஆராயப்பட்டது. இதற்கான முன்மொழிவுகள் கிராம சேவையாளர் பிரிவுகளில் சமூகமட்ட கூட்டங்கள் என்ற அடிப்படையில் கலந்துரையாடப்பட்டு அவ்வப்பிரதேசங்களுக்கு தேவையான அபிவிருத்தி முன்மொழிவுகள் முன்னுரிமை அடிப்படையில் இனங்காணப்பட்டு இன்றைய அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட்து.

இம்முன்மொழிவுகள் வாழ்வாதாரம் 12 இலடசம் , புது உட்கட்டமைப்பு 12 இலட்சம், சூழல் மற்றும் பேந்தக அபிவிருத்தி 03 இலட்சம், சமூக நல வேலைத்திட்டம் 03 இலட்சம் என முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைசார்பாகவும் விடயங்கள் ஆராயப்பட்டது.

இன்றைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் திருமதி. ரம்ஷியா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ருவைத், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் நெளபர்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாசர், ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.எல். தஸ்லீம், பிரதேச சபை உறுப்பினர்கள்  மற்றும்  உயர் அதிகாரிகள் அரச திணைக்கள அதிகாரிகள் நிறுவனங்களின் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும்  இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.







நசீர் அஹமட் எம்.பியின் தலைமையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நசீர் அஹமட் எம்.பியின் தலைமையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் Reviewed by Editor on October 14, 2021 Rating: 5