அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு Iconic Youths அமைப்பினால் நினைவுச்சின்னம் வழங்கல்

(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று பிராந்தியத்திற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி மற்றும் சமூக சேவை செயற்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி. டபிள்யு.ஏ.ஜீ.ஷகரிகா தமயந்திற்கு Iconic Youths அமைப்பினால் நினைவுச்சின்னம் வெள்ளிக்கிழமை (15) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நினைவுச் சின்னமானது Iconic Youths அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலின் போது இவ்வமைப்பின் நிர்வாக மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்கள் இணைந்து, அமைப்பின் தலைவர் யூ.எல். தில்ஷானினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறந்ததோர் இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்பும் பணியில் இவ்வமைப்பு அண்மைக்காலமாக செயற்படுவது குறித்து பலரும் இவ்வமைப்பை பாராட்டுவது ஓர் குறிப்பிடத்தக்க விடயமாகும். 


அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு Iconic Youths அமைப்பினால் நினைவுச்சின்னம் வழங்கல் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு Iconic Youths அமைப்பினால் நினைவுச்சின்னம் வழங்கல் Reviewed by Editor on October 18, 2021 Rating: 5