புதிய கடமையை பொறுப்பேற்ற தூதுவர் அம்சா

(றிஸ்வான் சாலிஹு)

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி.எம்.அம்சா சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் (KSA) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை ஜனாதிபதி அவர்களினால்  தூதுவராக நியமிக்கப்பட்ட திரு.அம்சா ஞாயிற்றுக்கிழமை (31) ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தூதுவராலய ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எளிமையான விழாவில்,  தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தேசிய கீதத்தைத் தொடர்ந்து, புதிய தூதுவர், மனைவி மற்றும் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் பாரம்பரிய எண்ணெய் விளக்கை ஏற்றி அதனைத் தொடர்ந்து தூதுவர் தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊழியர்களிடையே உரையாற்றிய தூதர் அம்சா,

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட தனது இலக்குகளை நிர்ணயித்தார்.

தூதுவர் அம்சா, இலங்கை வெளியுறவுச் சேவையின் உறுப்பினராகவும், வெளிநாட்டு வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கை தூதரகங்களில் பல்வேறு பணிகளை உள்ளடக்கிய 27 ஆண்டுகளுக்கும் மேலான இராஜதந்திரத்தில் அனுபவமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.






புதிய கடமையை பொறுப்பேற்ற தூதுவர் அம்சா புதிய கடமையை பொறுப்பேற்ற தூதுவர் அம்சா Reviewed by Admin Ceylon East on November 01, 2021 Rating: 5