முஷாரப் எம்.பின் முயற்சியால் மீட்கப்படும் காணிகள் எல்லையிடப்பட்டன

கடந்த 30 ஆண்டுகளாக தீர்வு காணப்படாது நீள்கின்ற வேகாமம் காணி மீட்பு அதன் இறுதிக் கட்டத்தை இன்று அடைந்துள்ளது.

திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் மேற்கொண்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்ற காணிகள் குறித்த வரலாற்று ஆய்வுகளை அடுத்து,  மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில், கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் செயலணி மூலமாக பொத்துவில் வேகாமம் காணிகளில்,  செய்கை பண்ண ஏதுவான காணிகளை விடுவிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ச்சியாக இடம்பெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் மற்றும் அலுவலக பணிகளை அடுத்து, இன்று (18) வியாழக்கிழமை இறுதிக்கட்டமாக அவர், வன பரிபாலன திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், காணி உரிமையாளர்கள் சகிதம் கள விஜயம் மேற்கொண்டு மீட்கப்படக்கூடிய காணிப்பரப்புகளை எல்லையிட்டு அடையாளப்படுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றதிலிருந்து பொத்துவிலில் மூங்கில் சோலை, கிராண்கேவை,  தஹரம்பலை, ஆமவட்டுவான் பிரதேசங்கள் மற்றும் சம்மாந்துறை கரங்காவட்டை காணிகளை செய்கை பண்ணுவதற்கான முதற்கட்ட விடுவிப்புகளை செய்து தொடர்ச்சியாக நில உரிமைக்காக உழைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்  முஷாரப் அவர்களுக்கும், காணி விடுவிப்புகளுக்கு வழிகோலும் மேன்மை தங்கிய ஜனாதிபதி, கௌரவ ஆளுநர், திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கும் பொத்துவில் மக்கள் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






முஷாரப் எம்.பின் முயற்சியால் மீட்கப்படும் காணிகள் எல்லையிடப்பட்டன முஷாரப் எம்.பின் முயற்சியால் மீட்கப்படும் காணிகள் எல்லையிடப்பட்டன Reviewed by Editor on November 18, 2021 Rating: 5