வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கல்

மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட தலைமன்னார் மக்களுக்கு கலாநிதி ஹரிஸ்தீன் அவர்களின் லைலா உம்மா தீன் பவுன்டெஸன் (LUDF) அமைப்பின்  ஊடாக உலர் உணவுப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (21) வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அகில இலங்கை வை. எம் எம்.ஏ அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் அஹமத் ஷாபீர் அவர்களினால் தலைமன்னாரில் தற்காலிக மன்டபங்களில் வசித்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கியதோடு பாதிக்கப்பட்ட குடுப்பங்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.

மேலும் அவர்களின் குடிசைகளின் அருகே பாதைகள் சேதமடைந்துள்ளமையினால் மழை நீர் தேங்கிகிடப்பதாலும் உலர் நிவாரண விநியோகம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமன்னார் வை.எம்.எம்.ஏ அமைப்பின் செயலாளரும் மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஜனாப்.நயிம், தலைமன்னார் கிராம நிலதாரி, ஊடகவிலாளர் சமூர்த்தின் நௌபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.










வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு  பொதி வழங்கல் Reviewed by Editor on November 23, 2021 Rating: 5