(றிஸ்வான் சாலிஹு)
ஐக்கிய இளைஞர் சக்தி அட்டாளைச்சேனை பிரதேச புதிய அங்கத்தவர்கள் இணைத்தலும் எதிர்கால முன்னெடுப்பு பற்றிய கலந்துரையாடலும் இன்று (18) வியாழக்கிழமை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய இளைஞர் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமான முகம்மட் சர்பான் தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் அவர்களும், அம்பாறை மாவட்ட செயற்குழு முக்கியஸ்தரும், பொத்துவில் பிரதேச அமைப்பாளருமான ஆஷிக் சுபையிர் அவர்களும் கலந்து கொண்டார்.
இப்பிரதேச இளைஞர்களின் எதிர்கால செயற்திட்டங்கள் பற்றி சிறப்பாக கலந்துரையாடப்பட்டதுடன் புதிய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டதோடு, எதிர்காலத்தில் தாங்கள் ஐக்கிய இளைஞர் சக்தியோடு கைகோர்த்து செயற்பட தயாராக உள்ளதாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் உறுதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.