பைசால் காசிம் எம்.பியால் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை வீதி

திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பைசால் காசிம் அவர்களின் முயற்சியில் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர் வைத்தியசாலை வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்காக சனிக்கிழமை (06) பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் ரீ. சிவ சுப்புரமணியம் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமுடைய இவ் வீதியானது பிரதான வீதி தொடக்கம் கடற்கரை வீதி வரை அமைந்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.






பைசால் காசிம் எம்.பியால் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை வீதி பைசால் காசிம் எம்.பியால் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை வீதி Reviewed by Editor on November 07, 2021 Rating: 5