ஏறாவூர் நகர சபையால் சாதனை வீரர் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்

(றிஸ்வான் சாலிஹு)

கொழும்பு சுகததாச விளையாட்டு  அரங்கத்தில் இடம் பெற்ற  Master Atheletic 65 -70 வயதுக்கும் இடைப்பட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று  வெற்றி வாகை சூடிய ஏறாவூரைச் சேர்ந்த அல்ஹாஜ் ஏ.எம்.லாபீர் அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர முதல்வர் கெளரவ எம்.எஸ். நழீம் அவர்களது தலைமையில் திங்கட்கிழமை (13) இடம்பெற்றது.

சாதனையாளர் லாபிர் அவர்களை நகர சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், நகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் மலர் மாலை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்கள்.

அதனைத் தொடர்ந்து கெளரவ நகர முதல்வரின் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு விழா நிகழ்விலே பிரதி தவிசாளர் எம்.எல். ரெபுபாசம்  அவர்கள் உரையாற்றுகையில்,

சாதனை வீரர் லாபீர் அவர்களின் கடந்த கால இளவயது மெய் வல்லுனர் போட்டிகளில் இவர் காண்பித்த சாதனையையும் வேகத்தையும்  நினைவு படுத்தியதோடு இனிவரும் காலங்களில் போட்டிகளில் கலந்து கொண்டு  பல வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்திட வேண்டும் என வாழ்த்தி பாராட்டினார்கள்.

கெளரவ நகர முதல்வர் தனதுரையில், 

சாதிப்பதுக்கு வயது ஒரு தடையல்ல என்ற செய்தியை எம் அனைவருக்கும் எத்தி வைத்த ஒருவராக திகழ்கிறார்  சாதனை வீரர் லாபீர் அவர்கள், தான் பங்கு பற்றிய 100மீற்றர் மற்றும் 200மீற்றர் மெய் வல்லுனர் போட்டிகளில் முறையே வெள்ளி பதக்கத்தையும், தங்கப் பதக்கத்தையும் பெற்று இந்த ஊருக்கும் , மாவட்டத்துக்கும், மாகாணத்துக்கும்,முழுத் தீவுக்கும் பெறுமை சேர்த்தத்தை இட்டு தானும் தனது சபையும் மட்டில்லா மகிழ்ச்சியடைவதோடு, இனிவரும் காலங்களில் இடம் பெறவுள்ள போட்டிகளில்  பங்கு பற்றி பல வெற்றி வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்திட வாழ்த்துவதோடு அதற்கான ஆரோக்கியத்தையும், வளங்களையும் இறைவன் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.

சாதனை வீரர் லாபீர் அவர்கள் கெளரவ தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் அவர்களினால் பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






ஏறாவூர் நகர சபையால் சாதனை வீரர் பாராட்டி கெளரவிக்கப்பட்டார் ஏறாவூர் நகர சபையால்  சாதனை வீரர் பாராட்டி கெளரவிக்கப்பட்டார் Reviewed by Editor on December 13, 2021 Rating: 5