அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தின் முதலாவது பெண் உயர்நீதிமன்ற சட்டத்தரணி

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட, பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தின் முதலாவது பெண் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக ஸீனா மஸாஹீர் நேற்று (13) திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர், பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிஷா மகா வித்தியாலயம் மற்றும் பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலை கல்வியை கற்று பின்னர் சட்டக்கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு தனது சட்டத்துறை கல்வியை நிறைவு செய்தார்.

ஸீனா மஸாஹீர் அவர்களின் இந்த முயற்சியானது இப்பிரதேச வாழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை இன்னும் உயர்வடைவதற்கும், இப்பிரதேச பெண் மாணவிகள் பல துறைகளில் முன்னேற்றம் அடைவதற்கும் வழியமைத்து கொடுத்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதோடு, பள்ளிக்குடியிருப்பு மண் பெருமையும், மட்டில்லா மகிழ்ச்சி அடைவதையும் குறிப்பிட வேண்டும்.

இவர், அக்கரைப்பற்றின் பிரசித்து பெற்ற ஆங்கில ஆசான் முஹம்மட் இஸ்மாயில் மஸாஹீர் அவர்களின் புதல்வியும், சட்டத்தரணி இல்ஹாம் ஸம்மாஷ் அவர்களின் அன்பு மனைவியும் என்பது குறிப்பிடத்தக்கது.






அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தின் முதலாவது பெண் உயர்நீதிமன்ற சட்டத்தரணி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தின் முதலாவது பெண் உயர்நீதிமன்ற சட்டத்தரணி Reviewed by Editor on December 14, 2021 Rating: 5