மின்சார விநியோகத்தில் மீண்டும் தடை ஏற்படுமா?

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி செயற்பாடுகள் முழுமையடையாத காரணத்தினால் இலங்கையின் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய மின் தொகுப்பில் 900 மெகாவாட் முழு கொள்ளவை சேர்ப்பது மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



மின்சார விநியோகத்தில் மீண்டும் தடை ஏற்படுமா? மின்சார விநியோகத்தில் மீண்டும் தடை ஏற்படுமா? Reviewed by Editor on December 22, 2021 Rating: 5