வடமேல் மாகாண புதிய ஆளுநராக கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) வசந்த கருனாகொட இன்று (09) வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
மனிதாபிமான நடவடிக்கையின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய இவர் இதற்கு முன்னர் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியவராவார்.
வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ராஜா கொல்லுரேயின் மறைவையடுத்தே இவர் வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமேல் மாகாண புதிய ஆளுநர் பதவிப்பிரமாணம்
Reviewed by Editor
on
December 09, 2021
Rating: