மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து, இருவர் படுகாயம்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் பெரிய கல்லாற்றில் நேற்று (06) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், கார் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் கம்பத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழுப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த மோட்டார் கார் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பெரியகல்லாற்றில் வைத்து அருகிலிருந்த ஸ்ரீலங்கா தொலைத் தொடர்புக்குச் சொந்தமான கம்பத்தில் மோதியுள்ளது.

இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன் அவர்கள் இருவரும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இருவரும், வைத்தியர்களான தம்பதிகளாவர்கள்.

இவ்விபத்துச் சம்பவத்தில் வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை தொலைத் தொடர்பு கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து, இருவர் படுகாயம் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து, இருவர் படுகாயம் Reviewed by Editor on December 07, 2021 Rating: 5