(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (09) வியாழக்கிழமை இரத்ததான முகாம் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் விடுத்த வேண்டுகோளையேற்று கல்லூரியின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், தொழில் நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளினால் இரத்ததானம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தொழில் நுட்பக் கல்லூரியின் அதிபர் எஸ்.யூ.எம்.இம்தியாஸ், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஸ்றின், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு
Reviewed by Editor
on
December 09, 2021
Rating: