அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

(சியாத் எம் இஸ்மாயில், பட உதவி கு. மாதவன்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை  புதிய ஆண்டின் கடமைச் செயற்பாடுகள்   திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஆக்கில் சரிபுத்தீன் நெறிப்படுத்தலில், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத். எம். ஹனிபா அவர்களினால் வைபவ ரீதியாக தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன்போது ராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரச சேவைக்கான உறுதிமொழி சத்திய பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.

சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரஜைகளை, மகிழ்ச்சியான குடும்பங்களை, பண்பாடான ஒழுக்க ரீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்காக அரச சேவையின் மகத்தான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டியது அவசியம் மற்றும் கொவிட் கால சுகாதார நடைமுறைகள் பற்றியும் உரை திகழ்த்தப்பட்டது. 

இந்நிகழ்வில், நிருவாக உத்தியோகத்தர்  எஸ்.எல். சாதிக், தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர், கணக்காளர் நஸிமுல் ஹக் உட்பட அனைத்து தர  சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் Reviewed by Editor on January 03, 2022 Rating: 5