பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் துரித முயற்சியின் மூலம் தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரனையில் முசலி தேசிய பாடசாலையின் அதிபர் கே.எம்.லாபிர் அவர்களின் தலைமையில் மன்/முசலி தேசிய பாடசாலையில் சுமார் இரண்டு கோடி எழுபது இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (27) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முசலி பிரதேச செயலகப் பிரதேசச் செயலாளர் திரு.ரஜீவ், மாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. வரதீஸ்வரன், வலயக் கல்வி பணிப்பாளர் திரு. ஜீ.டி. தேவராஜ், Muslim hands நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் ISRC அமைப்பின் ஸ்தாபகருமான மதிப்பிற்குரிய மிஹ்லார், முசலி கோட்டக் கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு Reviewed by Editor on January 27, 2022 Rating: 5