செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக, ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில், ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ், “சத்காரய” திட்டத்தின் 36 ஆவது கட்டமாக, 2,457,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் சனிக்கிழமை (08) வவுனியா, செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, 2,457,000 ரூபா பெறுமதியான Dialysis Machine with Portable RO System இயந்திரம் ஒன்றும் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் வைத்தியசாலை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு Reviewed by Editor on January 10, 2022 Rating: 5