பிரதமரின் திருமண நிகழ்வு இரத்து

நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடெர்ன், தனது திருமண நிகழ்வை இரத்துச் செய்துள்ளார். 'ஒமிக்ரோன்' வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் தனது திருமண நிகழ்வை இரத்துச் செய்ததாக அவர் அறிவித்திருக்கின்றார். 

நாடளாவிய ரீதியில் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் ஜெசிந்தா அடெர்னின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

திருமண நிகழ்வு எப்போது இடம்பெறும் என்ற திகதியை அறிவித்திருக்காவிட்டாலும், திருமணத்திற்கான திகதியை அவர் அறிவிக்காவிட்டாலும் நிகழ்வு இடம்பெற மாட்டாது என்று காணொளியொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 



பிரதமரின் திருமண நிகழ்வு இரத்து பிரதமரின் திருமண நிகழ்வு இரத்து Reviewed by Editor on January 24, 2022 Rating: 5