நீதிமன்ற கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்த நீதி அமைச்சர்

நீதி அமைச்சின்  நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை திட்டத்திற்கு அமைவாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாங்குளம் நீதிமன்றக் கட்டிட தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம் அலி சப்ரி அவர்களால் நேற்று (27) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி சிறப்பான சேவையொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதியானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்லஸ் தேவானந்தா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.






நீதிமன்ற கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்த நீதி அமைச்சர் நீதிமன்ற கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்த நீதி அமைச்சர் Reviewed by Editor on January 28, 2022 Rating: 5