கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, வாழைச்சேனை பொலிஸார், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சீரற்ற கால நிலையின் காரணமாக மழைநீர் தேங்கி நிற்கும் பல்வேறு பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் சாத்தியம் அதிகமாக காணப்படுகிறது.
இவற்றை அடையாளம் கண்டு பொது மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வுகளும், களப்பரிசோதனைகளும் மாஞ்சோலை கிராமத்தில் இடம் பெற்றது.
இதன்போது டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்தின் போது ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் பொதுச்சுகாதார பரிசோதகர்களான என்.எம்.சிஹான், ஜெளபர் உள்ளிட்ட பொலீஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பிரதேச சிவில் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.