சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி, தெஹிவளை தொழில் நுட்பக் கல்லூரி, மருதானை தொழில் நுட்பக் கல்லூரி, பேருவளை இக்ரா தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் அதிபரும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப், முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் ஆகியோரின் ஆலோசகராக பணியாற்றியவருமான சாய்ந்தமருதை சேர்ந்த அல்ஹாஜ் எம்.எச்.ஏ.சமட் சேர் அவர்கள் இன்று (30) கொழும்பில் காலமானார்.
இவர் ஊடகவியலாளர் அஸ்ரப் ஏ சமட் அவர்களின் அன்புத் தந்தையாவார்.
அன்னாரின் ஜனாஸா கல்கிஸ்ஸை சென் மேரிஸ் ரோட் இலக்கம் 11/7 இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை (ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து களுபோவில ஜும்ஆப் பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி - மெட்ரோ மிரர்
சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள் அதிபர் காலமானார்
 
        Reviewed by Editor
        on 
        
January 30, 2022
 
        Rating: