மார்க்ஸ்மென் விளையாட்டு கழகத்தின் மாபெரும் இரத்ததான முகாம்

(சியாத்.எம்.இஸ்மாயில்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கு அன்பளிப்புச் செய்யும் நோக்கில்,  அட்டாளைச்சேனை மார்க்ஸ்மென் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  மாபெரும் இரத்ததான முகாம் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது. 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். அஸாத் .எம்.ஹனிபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,  மார்க்ஸ்மென் விளையாட்டு கழகத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான றிசாத் ஏ.காதரின் ஒருங்கிணைப்பில்   கொவிட் கால நிலைமை மற்றும் இரத்தப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமில்  வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள்,  விளையாட்டு கழக பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியதுடன், இதில் ஆண்கள், பெண்கள் என இரத்த கொடையாளர்கள் பெரும்பாலானோர் ஆர்வத்தோடு கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.







                               


மார்க்ஸ்மென் விளையாட்டு கழகத்தின் மாபெரும் இரத்ததான முகாம் மார்க்ஸ்மென் விளையாட்டு கழகத்தின் மாபெரும் இரத்ததான முகாம் Reviewed by Editor on February 27, 2022 Rating: 5