அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்களின் ஒன்றுகூடல்

அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேசசபைகளின் தவிசாளர்களது ஒன்று கூடல் நிகழ்வு நாமல் ஓயா பிரதேசசபையில் நேற்று (11) இடம்பெற்றது. 

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினியின் நெறிப்படுத்தலில், நாமல்ஓயா பிரதேச சபை தவிசாளரினுடைய தலைமையில் இவ்ஒன்றுகூடல் இடம்பெற்றது.

கடந்த கால பிரதேச சபையினுடைய செயற்பாடு எதிர்கால செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, எதிர்கால திட்டமிடல் தொடர்பாக பல முன்னுதாரணமான கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்பட்டது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் பிரதேச சபைகளுடைய வழிநடத்தல்கள் இங்கு ஆராயப்பட்டதுடன், பிரதேசசபைகளின் செயலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்களின் ஒன்றுகூடல் அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்களின் ஒன்றுகூடல் Reviewed by Editor on February 12, 2022 Rating: 5