அல்-அக்‌ஷா பள்ளிவாயல் ஆயுட் காலத் தலைவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். - முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடி அல்-அக்‌ஷா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலினுடைய ஆயுட் காலத் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹீம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மர்ஹூம் இப்ராஹிம் ஹாஜியார் கடந்த 40 வருடங்களாக என்னோடு அரசியலில் ஈடுபட்டவர். 1982ஆம்ஆண்டு முதலாவது புதிய காத்தான்குடி கிராமோதய சபைத் தேர்தல், மண்முனை வடக்கு பிரதேச சபையினுடைய உறுப்பினர்களுக்கான தேர்தலில் என்னோடு முழுமையாக நின்று உழைத்தவர். என்னுடைய அரசியல் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பக்கபலமாக இருந்தவர்.

புதிய காத்தான்குடி ஜும்ஆப் பள்ளிவாயலை அல் அக்‌ஷா வடிவத்தில் கட்டியெழுப்புவதில் முழு மூச்சாக என்னோடு சேர்ந்து செயற்பட்டவர். 

அவரது உற்சாகமும், என்னோடு நின்று ஒத்துழைத்த விதமும், அவரது அயராத உழைப்பும் தான் அப் பள்ளிவாயல் நன்றாக மிளிற ஏதுவாக அமைந்தது. அதற்காக முழு காரண கர்த்தாவாக இருந்தவர் மர்ஹூம் இப்றாஹீம் ஹாஜியார் அவர்கள்.

புதிய காத்தான்குடியின் அபிவிருத்திப் பணிகளில் பாடசாலைகள், வீதிகள், பல்வேறுபட்ட நிறுவனங்களை கட்டியெழுப்புவதில் மாத்திரமின்றி அல் அக்‌ஷா பள்ளிவாயலினுடைய வக்பு சொத்துக்களை சேர்ப்பதிலும் என்னோடு அயராது உழைத்த ஒருவர் தான் மர்ஹூம் இப்ராஹீம் ஹாஜியார் அவர்கள்.

அவரது மரணச் செய்தி கேட்டு நான் ஆழ்ந்த கவலை அடைகின்றேன். அல்லாஹுத்தஆலா அவரது நல்லமல்களை அங்கீகரிக்க வேண்டும்.அவருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பொறுமையையும், மன தைரியத்தையும் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அல்-அக்‌ஷா பள்ளிவாயல் ஆயுட் காலத் தலைவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். - முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அல்-அக்‌ஷா பள்ளிவாயல் ஆயுட் காலத் தலைவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். - முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் Reviewed by Editor on February 05, 2022 Rating: 5