நீர் வழங்கலின் வெற்றிக்கு பரிசோதனைகள் மற்றும் அறிவு அத்தியாவசியம்- சர்வதேச புத்திஜீவிகள் வலியுறுத்தல்

(அமீன் எம் றிலான்)

உயர்ந்த குணமிக்க பரிசுத்தமான குடிநீரை நுகர்வோருக்கு வழங்கும் போதும் பிரதேச ரீதியான நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கும் தினசரி பரிசோதனை மற்றும் துறைசார் அறிவை தொடர்ந்து வழங்க வேண்டும்  என நீர் வழங்கல் தொடர்பான புத்திஜீவிகள் வலியுத்துத்தினர்.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களினால் நியமிக்கப்பட்ட நீர் வழங்கல் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச புத்திஜீவிகள் அடங்கிய குழுவின் மாதாந்த சந்திப்பின் போதே புத்திஜீவிகள் இதனை தெரிவித்தனர்.

நீர் வழங்கல் துறைசார் பேராசிரியர்கள்,கலாநிதிகள்,சர்வதேச அங்கீகாரம் பெற்ற நீர் வழங்கல் செயற்திட்ட மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பணிபுரியும் பொறியிலாளர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த புத்திஜீவிகளுடனான சந்திப்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து தெரிவிக்கும் போது,

பேராதெனிய பல்கலைக்கழக வளாகத்தில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழ் சீன-இலங்கை கூட்டு ஆராய்ச்சி நிறுவனம் தற்போது நிறுவப்பட்டுள்ளதாகவும்  நிலத்தடி நீர் மற்றும் கிணற்று நீர் தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுத்தல்,சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் உள்ள பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக வேறு விதமான பரிசோதனைகளை முன்னெடுத்தல் மற்றும் நிலத்தடி நீர் ஊற்றுகளை கொண்ட பகுதிகளை வரைப்படத்திற்கு கொண்டுவரல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் எமது அதிகாரிகளுக்கும் சேவையிலுள்ள ஊழியர்களுக்கும் பயற்சி வழங்குவதற்காக விசேட பயிற்சி நிலையத்திற்கான நிர்மாண பணிகள்  தெலவல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது பொது மக்களின் தேவை,நம்பிக்கை மற்றும் விருப்புக்கு அமைய  நீர் வழங்கல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக நீர் வேலைத்திட்டம் முன்னெடுக்கும் போது மக்களின் திருப்தியை விசேடமாக கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

சிறியளவிலான நீர் சுத்திகரிப்பு பிரிவுகளில் நீர் ஊற்று வழிகளை பாதுகாத்தல் மற்றும் அதனை வழிநடத்தி செல்வது மக்களின் ஒத்துழைப்புடன் பின்னிப் பினைந்துள்ளமையினால்  மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அனைவருக்கும் குடிநீர் என்ற வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கை என புத்திஜீவிகள் சுட்டிகாட்டினர்.

நீர் வழங்கல் அமைச்சரின் ஆலோசகர் சதக குணசேகரவின் வழிநடத்தலின் கீழ் நடைபெற்ற குறித்த குழு கூட்டத்திற்கு சர்வதேச புத்திஜீவிகள் தொடர்பாடல் சட்டத்தரணி சிரன்ஜய நாணயக்கார உட்பட புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டதோடு, சூம் வலைத்தளத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





நீர் வழங்கலின் வெற்றிக்கு பரிசோதனைகள் மற்றும் அறிவு அத்தியாவசியம்- சர்வதேச புத்திஜீவிகள் வலியுறுத்தல் நீர் வழங்கலின் வெற்றிக்கு பரிசோதனைகள் மற்றும் அறிவு அத்தியாவசியம்- சர்வதேச புத்திஜீவிகள் வலியுறுத்தல் Reviewed by Editor on February 21, 2022 Rating: 5