(றிஸ்வான் சாலிஹு)
அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (08) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார் அவர்களின் தலைமையில் மிக விமர்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்களும், கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வீ.ஜெகதீசன் அவர்களும் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருது பரிசில்களை வழங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் சிறந்த எழுத்தாளருக்கான "கலைஞர் சுவதம்" விருதினை அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான கவிஞர் ஏ.எல்.கால்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டதோடு, அவர் அதிதிகளினால் பாராட்டப்பட்டார்.
சிறந்த பரதநாட்டிய ஆசிரியைக்கான விருதினை காரைதீவைச் சேர்ந்த ஜே. தக்சாளினி இந்நிகழ்வில் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
February 08, 2022
Rating:


